அகிம்சையின் உறுதியான நிலை

நியூயார்க் 'நேஷன்' பத்திரிகையிலிருந்து ஒரு நண்பர் கீழ்க்கண்ட விஷத்தைக் கத்தரித்து அனுப்பியிருக்கிறார்:

"சிறிது காலத்திற்கு முன்பு (924இன் பிறர்பகுதியிலோ அல்லது 1925-இன் தொடக்கத்திலோ) சீனாவில் இருக்கும் அமெரிக்கப் பாதிரிமார்களின் இருபத்தைந்து பேர், பீக்கிங்கில் இருக்கும் அமெரிக்க அரசாங்கதின் பிரதிநிதிக்குக் கிழ்க்கண்ட கோரிக்கையை அனுப்பினார்கள்:"

"கீழ்க் கையொப்பமிட்டிருக்கும் அமெரிக்கப் பாதிரிமார்களாகிய நாங்கள், கிறிஸ்தவ வேதத்தின் சகோதரத்துவ, சமாதானச் செய்தியைப் பரப்புவதற்காகச் சீனாவில் இருந்து வருகிறோம். சகோதரத்துவத்தை வளர்த்து, போர்ச்சந்தர்ப்பம் எல்லாவற்றையுமே போக்கிவிடுவதாகக் கிறிஸ்துவின் புதிய மார்க்கத்தில் ஆண்களையும் பெண்களையும் நடத்திச் செல்லுவதே எங்கள் பணி. ஆகையால், எங்களையோ அல்லது எங்களுடைய சொதுக்களையோ பாதுகாப்பதற்கு எந்தவிதமான இராணுவ நிர்பந்த்தையோ, முக்கியமாக அந்நியப் படைப் பலத்தையோ உபயோகிக்க வேண்டாம் என்பதை எங்களுடைய மனமுவந்த கோரிக்கை. சட்டத்திற்கு அடங்காதவர்கள் எங்களைப் பிடித்துக் கொண்டாலோ அல்லது அவர்களால் நாங்கள் சாக நேரும்போல் இருந்தாலோ, எங்கள் தலைக்காகப் பணம் எதுவும் கொடுக்க வேண்டாம்; அவர்களை அடக்கி ஒடுக்குவதற்கென்று படைய அனுப்பவும் வேண்டாம்; வற்புறுத்தி வாக்குறுதிகளைப் பெறவும் வேண்டாம். நியாயத்தையும் சமாதானத்தையும் உண்டாக்குவதற்கு வழி, தவறுகளைச் சகித்துக்கொண்டு பதிலுக்குப் பதில் செய்யாமல், எல்லோரிடத்திலும் எல்லாச் சமயங்களிலும் தமக்கு நல்லெண்ண உணர்ச்சி இருக்கும்படி பார்ப்பதேயாகும். இதில் நம்பி,ககை வைத்தே இக்கோரிக்கையை அனுப்புகிறோம்."

"ஆனால், அமெரிக்கத் தூதரகமோ, சீனாவில் இருக்கும் அமெரிக்கரைப் பாதுகாக்கத் தங்களுக்கு இருக்கும் அவசியத்திற்கு அம்மனு பொருத்தமானதாக இல்லை என்று பதில் அளித்துவிட்டது. மனுவில் கையெழுத்திட்டிருப்போர் சம்பந்தமாக அவசர நிலைமை ஏற்பட்ல் அனுசரிக்க வேண்டிய முறைகளில் இவர்களுக்க வித்விலக்குக் கிடையாது என்றம் சொல்லிவிட்டது"

ஒன்றுக்கொன்று மாறுபட்ட இரு நிலைமைகள், ஒரே சமயத்தில் சரியானவையாக இருந்துவிடும் சந்தர்ப்பங்களில் ஒன்று இது. வீரமுள்ள பாதிரிமார்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அனுசரிக்கக்கூடியது இதைத் தவிர வேறு எதுவும் இல்லை. ஆனால், இக்க்லத்திலோ இவ்விதம் செய்கிறவர்கள் மிகச்சிலரே. இதே சீனாவைப்பற்றிச் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் பாதிரிமார்களின் தூதுக் குழு ஒன்று காலஞ்சென்ற லார்டு சாலிஸ்பரியைச் சந்தித்து, தங்களுடைய உபதேசங்களைக் கேட்க விரும்பாத சீனர்களிடம் தங்கள் மதப் பிரசாரத்தைச் செய்வதற்குப் பிரிட்டிஷ் பீரங்கிக் கப்பல்களின் பாதுகாப்பு வேண்டும் என்று கேட்கவில்லையா? அப்பொழுது அந்தத் திறமைசாலியான லார்டு, பிரிட்டிஷ் படைகளின் பாதுகாப்பை அவர்கள் கோரினால் சர்வதேசக் கடமைகளுக்கு அவர்கள் உடன்படுவதுடன் தங்கள் மதப்பிரசார ஆர்வத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றார். அவர்களுக்கு இன்னுமொன்றையும் நினைவுபடுத்தினார்:'பழங்காலத்தில் கிறிஸ்தவர்கள் உலகத்தின் மூலை முடுக்குகளுக்கெல்லாம் சென்று மதத்தைப் பரப்பினார்களென்றால், ஆண்டவனைத் தவிர அவர்கள் தங்களுக்கு வேறு எந்தப் பாதுகாப்பையும் எதிர்பார்க்கவில்லை. தங்கள் உயிரையும் எப்போதும் ஆபத்தான நிலையிலேயே வைத்திருந்தார்கள்' என்றர். நியூயார்க் 'நேஷன்' பத்திரிக குறிப்பிட்டிருக்கும் சம்பவத்தில் அப்பாதிரிமார்கள் இப்புராதனப் பழக்கத்திற்கே போயிருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.

அமெரிக்க அரசாங்கம், இப்பொழுது அது கொண்டிருக்கும் தன்மையை விடாமல் வைத்திருக்கும் வரையில், அது இப்பொழுது அளித்திருப்பதாகக் கூறப்படும் பதிரைத்தான் அதனால் அளிக்க முடியும். இக்காலத்து முறையிலுள்ள தீமையை அந்தப் பதில் வெளிப்படுத்துகிறது என்பது வேறு விஷயம். அமெரிக்கக் கௌரவம் அதன் படைப் பலத்தில்தான் இருக்கிறதேயன்றி ஒழுக்க முறையில் இல்லை. அதன் கௌரவம் அல்லது பெயர் என்று சொல்லப்படுவதைக் காட்டிக் கொள்ளுவதற்காக அமெரிக்காவின் முழுப் படைப்பலமும் திரட்டப்படுவானேன்? தங்களுடைய மத போதனையைச் செய்வதற்காக இருபத்தைந்து அமெரிக்கப் பாதிரிமார்கள், யாரும் அழைக்கமல் தாங்களே சீனவுக்கச் சென்று, அப்படிப் பிரசாரம் செய்யும்போது கொல்லப்பட்டு விட்டால், அமெரிக்காவின் கௌரவத்திற்கு என்ன தீங்கு ஏற்பட்டுவிடும்? அப்படி அவர்கள் கொல்லப்பட்டுவிடுவது அவர்கள் மேற்கொண்டுள்ள காரியத்திற்கு மிகவும் நல்லதாகவும் இருக்கலாம். அமெரிக்க அரசாங்கம் தன்னுடைய தலையீட்டினால் துன்பத்தை ஏற்றுக்கொள்ளுவதென்ற தருமத்தில் குறுக்கிடுவதாகும். ஆனால், அமெரிக்கா தன்னையே அடக்கிக் கொள்ளுமானால், அதன் நோக்கத்திலேயே முழு மாறுதல் ஏற்பட்டதாக இருக்கும். இன்று குடி உரிமைப் பாதுகாப்பு என்பது, தேசத்தின் வர்த்தகப் பாதுகாப்பு. அதாவது, பிறரைச் சுரண்டுவதற்குப் பாதுகாப்பு. இந்தச் சுரண்டலை விரும்பாத மக்கள் மீது தங்கள் வர்த்தகத்தைப் புகுத்தப் படைப்பலத்தின் உபயோகம் வேண்டியிருக்கிறது. ஆகையால், மனித வர்க்கத்தின் பொதுவான நலனுக்கு ஆண்களும் பெட்ணகளும் அமைதியுடன் ஒன்றுபட்டிருப்பதே நாடு என்பதற்கு மாறாக ஒரு வகையில் கொள்ளைக் கூட்டமாகவே அது ஆகிவிட்டது. மனித வர்க்கத்தின் பொதுவான நன்மைக்கென்று நாடுகள் இருக்குமாயின், அந்நாட்டினரின் பலம், உயர்ந்த ஒழுக்கமுடைமையில் இருக்க வேண்டுமேயன்றித் துப்பாக்கி மருந்தை உபயோகிப்பதிலுள்ள ஆற்றலைப் பொறுத்து இராது. இருபத்தைந்து பாதிரிமார்களின் செய்கை, புனரமைப்புப் பெற்ற சமூகம் அல்லது புனரமைப்புப் பெற்ற நாட்டின் மள்ஙகலான நிழல். வாழ்க்கையின் ஒவ்வொறு துறையிலும் தங்களுடைய இக்கொள்கையை அவர்கள் நிறைவேற்றி வந்தார்களா என்பது எனக்குத் தெரியாது. வேண்டாம் எனறு அவர்கள் கூறியும் அமெரிக்க அரசாங்கம் பாதுகாப்பளிப்பதாக மிரட்டியிருந்தாலும், பதிலுக்கு வஞ்சம் தீர்த்துக கொள்ளுவதன் மூலம் தடுத்தோ, சமனப்படுத்தியோ இருக்கலாம் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. ஆனால், அப்படிச் செய்வதாயின் தங்களையே அடியோடு அழித்துக்கொள்ள வேண்டியிருக்கும். பலாத்காரத்தின் வழிபாட்டை எதிர்க்கவேண்டுமானால், மிருக பலத்தையே வணங்கிக் கொண்டிருப்போர் கையாளும் முறைக்கு முற்றிலும் மாறுபட்டதான ஒன்றினாலேயே எதிர்க்க வேண்டும்.

இக்காலத்தில் மிருகபலத்தை வழிபடுவதற்கு ஒரு தத்துவமும், அதற்கு ஆதரவாக ஒரு சரித்திரமும் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது. போரை வேண்டாத சிறுபான்மையினரின் தொகை மிகச் சொற்பம். ஆனால், இவர்களுக்கு அசையாத நம்பிக்கையும் இருந்துவருமாயின், மிருகபலத்தினிடம் பயப்பட வேண்டியதில்லை. ஆனால், மிருகபலமின்றியே சமூகம் ஒன்றுபட்டிருக்கும்படிச் செய்வது சாத்தியம் என்ற நம்பிக்கை எப்படியோ குறைவாக இருக்கிறது என்றாலும், ஒருவர் மட்டுமே உலகம் முழுவதையும் எதிர்த்து நிற்க முடியும் என்றால், இரண்டு பேர் அல்லது அதிகமான பேர் செர்ந்து ஏன் அப்படிச் செய்ய முடியாது? இதற்குச் சொல்லப்படும் விடையையும் நான் அறிவேன். நம்மீது சந்தடியின்றிப் படர்ந்துகொண்டு வரும் புரட்சியின் சாத்தியங்களைக் காலம் ஒன்றே காட்டமுடியும். காரியம் இப்பொழுதே நடக்கத் தொடங்கிவிட்டபோது நடக்குமா நடக்காதா என்று ஆராய்ச்சி செய்வது வீணே, நம்பிக்கையுள்ளவர்கள், தெளிவான பலனைக் காட்ட முடியாத ஆரம்ப முயற்சியில் சேர்ந்துகொள்ளுவார்கள்.

வேண்டிய தகுதிகள்

சத்தியாக்கிரகிகளுக்கு வேண்டிய தகுதிகள் யாவை என்பதைக் குறித்துச் சிந்திக்கும்படி, நான்கு நாள் உண்ணாவிரதம் என்னைச் செய்திருக்கிறது. இவைகளைக் குறித்து 1921-ல் கவனமாக சிந்தித்து நான் எழுதியிருந்த போதிலும், அவை மறக்கப்பட்டுவிட்டன என்றே தோன்றுகிறது.

சத்தியாக்கிரகத்தில் எப்பொழுதுமே எண்ணிக்கை முக்கியம் அல்ல. ஆனால் தரம்தான் முக்கியம். அதுவும் பலாத்காரச் சக்திகள் மேலோக்கியிருக்கையில் இது இன்னும் அதிக முக்கியமானதாகிறது.

மேலும், தீமையைச் செய்கிறவரை சங்கடத்திற்குள்ளாக்கவேண்டும் என்ற நோக்கம் சத்தியாக்கிரகிக்கு எப்பொழுதுமே கிடையாது என்பதையும் மறந்துவிடுகிறார்கள். கோரிக்கை விடுவது, எதிராளி பயப்படும்படிச் செய்ய வேண்டும் என்பதற்காக அன்று. அவர்ன் மனத்தை மாற்றுவதற்காகவே கோரிக்கை; அது அதற்காகவே இருக்கவும் வேண்டும். தீமை செய்கிறவர் மனமாற்றம் அடையச் செய்ய வேண்டும் என்பதுதான் சத்தியாக்கிரகியின் நோக்கமேய்ன்றி, அவரைச் சங்கடப்படுத்தவேண்டும் என்பது அல்ல. தாம் செய்யும் காரியங்களில் போலித்தன்மை எதுவுமே இல்லாதபடி சத்தியாக்கிரகி தவிப்பார். அவர் இயற்கையோடும், மனத்தில் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையோடும் காரிங்களைச் செய்வார்.

இந்தியாவில் ஒவ்வொரு சத்தியாக்கிரகிக்கும் கீழே கண்ட தகுதிகள் அவசியமானவை என்று கருதுகிறேன். மேலே சொன்னதை வாசகர் மனத்தில் வைத்துக்கொண்டு கவனித்தால் இத்தகுதிகளின் முக்கியத்தை அறியக்கூடும்:

1. சத்தியாக்கிரகிக்குக் கடவிளிடம் ஜீவநம்பிக்கை இருக்கவேண்டும். ஏனெனில், கடவுளைத் தவிர அவரக்கு வேறு கதி இல்லை.

2. சத்தியமும் அகிம்சையுமே தமது தருமம் என்று அவர் நம்ப வேண்டும். ஆகையால் துன்பங்களைத் தாம் அனுபவிப்பதன் மூலம் சத்தியத்தையும் அன்பையும் உண்டாக்க அவர் எதிர்பார்ப்பதால், மனித இயல்பில் நல்லதே உண்டு என்பதிலும் அவருக்கு நம்பிக்கை இருக்கவேண்டும்.

3. தூய வாழ்க்கையை அவர் நடத்தி வரவேண்டும். தமது லட்சியத்திற்காக உயிரையும் தமது உடைமைகளையும் விடவும் அவர் விரும்புவதோடு, இதற்குத் தயாராகவும் இருக்கவேண்டும்.
4. அவர் வழக்கமாகவே கதர் உடுத்துபராகவும் நூற்பவராகவும் இருக்கவேண்டும். இந்தியாவுக்கு இது அத்தியாவசியமானதாகும்.

5. அவருடைய புத்தி குழப்பமில்லாதிருப்பதை முன்னிட்டும், புத்தி திடமானதாக இருப்பதற்காகவும் அவர் மதுபானம் செய்யாதவராக இருப்பதோடு, போதை வஸ்துக்களில் எதையும் உபயோகிக்காதவராகவும் இருக்கவேண்டும்.

6. அப்போதைக்கப்போது விதிக்கப்படும் கட்டுதிட்ட முறைகளையெல்ம் மனப்பூர்வமாக அவர் நிறைவேற்றி வரவேண்டும்.

7. அவருடைய சுயமரியாதையைப் பாதிப்பதற்கென்றறே தனியாக ஏற்படுத்தப்பட்டதாக இருந்தாலன்றி, எல்லாச் சிறை விதிகளுக்கும் அவர் உடன்பட்டு நடக்க வேண்டும்.

இருக்கஇருக்க வேண்டீய தகுதிகள் இதோடு முடிந்துவிட்டன என்று கருதக்கூடாது உதாரணத்திற்காகவே இவை கூறப்பட்டிருக்கின்றன.

ஹரிஜன் - 25.03.1939

Website Designed by Gandhi Iyakkam, Thanjavur